21 ஆம் நூற்றாண்டில்
கற்றல் கற்பித்தலில்
முன்னுதாரணமாகத் திகழும்
முகுந்தன் தமிழ்ப்பள்ளி
'21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல்' வழி அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும் என்பது மலேசியக் கல்வி அமைச்சின் திட்டமாகும்.
இந்த அதிநவீன டிஜிட்டல் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் வெண்திரை, எல்சிடி ஆகியவற்றின் பயன்பாடு மிகச் சிறந்த ஒன்றாகும். அதோடு, இவை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல வழிகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தப் பயன்மிக்கதாக அமைந்துள்ளன என்றால் மிகையாகாது.
'21ஆம் நூற்றாண்டு திறன்கள்" என்பவை, குடியியல்சார் அறிவு, உலகளாவிய விழிப்புணர்வு, பிற கலாசாரங்களைப் புரிந்துகொண்டு கையாளக்கூடிய திறன்கள், நுண்ணாய்வு, புத்தாக்கப்புனைவு திறன்கள், தகவல், கருத்துப் பரிமாற்றத் திறன்கள் ஆகியவற்றை உட்படுத்தியவையாகும்.
கல்வியின்பால் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி விளைபயன்மிக்க கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை நடத்த அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ள இந்த அணுகுமுறையைப் பல பள்ளிகள் மிகச் சிறப்பாக கையாளுகின்றன.
அவ்வகையில், '21 ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல்' அணுகுமுறையை மிகச் சிறப்பாக அமல்படுத்திய 15 பள்ளிகளை போர்ட்டிக்சன் கல்வி இலாகா தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கியது. இந்த அங்கீகாரத்தை முகுந்தன் தமிழ்ப்பள்ளி, ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளி, ராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி ஆகியவை பெற்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பள்ளிகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தால், அப்பள்ளிகளும் '21ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல்' அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்களை புதியதொரு கல்வி உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல விஷயங்களை பல ஆசிரியர்களோடும் பள்ளிகளோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பிப். 25ஆம் தேதி 'பிணீக்ஷீவீ ஜிமீக்ஷீதீuளீணீ றிஞி கீவீஸீ ஷிநீலீஷீஷீறீ' எனும் நிகழ்ச்சியை தேசிய வகை முகுந்தன் தமிழ்ப்பள்ளி நடத்தியது.
இந்நாளன்று போர்ட்டிக்சன் வட்டாரத்தில் உள்ள தேசியப்பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் வகுப்பறைகளின் அலங்காரம், 21ஆம் நூற்றாண்டு திறன்கல்வியைப் போதிக்கும் முறை, கண்காட்சி உட்பட பல விஷயங்கள் குறித்து தலைமையாசிரியர் திருமதி நாகஜோதி ஜெகநாதன் வருகையாளர்களுக்கு விளக்கினார்.
தற்போதைய மாணவர்கள் தொழில்நுட்பத்தினூடே வளர்கிறார்கள். ஆகையால், இன்னும் 'சிலீணீறீளீ ணீஸீபீ ஜிணீறீளீ' கல்விமுறை இன்றைய சூழலுக்கு சரிவராது. மாணவர்களை ஈர்க்கும் வகையில் தொழில்நுட்ப கல்விகளைப் புகட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஆகையால், ஒவ்வொரு பள்ளியிலும் இந்த அணுகுமுறை செயல்படுத்தப்பட வேண்டும். இதனால், மாணவர்களின் ஆர்வம் அதிகரிப்பதோடு, பள்ளிக்கு மட்டம் போடுபவர்களின் எண்ணிக்கை குறையும். தேர்ச்சி விகிதமும் உயரும் என அவர் கூறினார்.
125 மாணவர்கள் பயிலும் முகுந்தன் தமிழ்ப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளுமே '21ஆம் நூற்றாண்டில் கற்றல் கற்பித்தல்' திட்டத்திற்கு ஏற்றவாறு தயார்செய்யப்பட்டுள்ளன. அவை, இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பேருதவியால் சாத்தியப்பட்டன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் வகுப்புகளை அலங்கரிக்கவும், திறன்கல்வி கற்பித்தலுக்கு தயார்செய்யவும் துணை புரிந்தனர். சில அரசு சாரா இயக்கங்கள் அனைத்து வகுப்பறைகளிலும் எல்சிடி பொருத்தித் தந்தன.
போர்ட்டிக்சன் கல்வி இலாகா அதன் தலைமையில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் நல்ல வழிகாட்டியாக அமைகின்றது. பல அணுகுமுறைகளை புகட்டுவதோடு, திட்டங்களைத் தீட்டுகின்றன. இந்த இலாகாவின் கீழ் பணியாற்ற நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தலைமையாசிரியர் நாகஜோதி தெரிவித்தார்.